உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வியாபாரம் சார் தொழில் முதலீடு; இளைஞர்களுக்கு மானிய உதவி

வியாபாரம் சார் தொழில் முதலீடு; இளைஞர்களுக்கு மானிய உதவி

திருப்பூர்:கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தமிழகத்தில், கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யு.ஒய்.இ.ஜி.பி.,) செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில் முதலீடுகளுக்கு, 3.75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், வியாபாரம் சார்ந்த தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 45 வயது; சிறப்பு பிரிவினர் 55 வயது வரம்புக்குள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.தொழில் துவங்க விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/uyegp என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது தபால் மூலமாகவோ, படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை