உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்ட ஆலோசகர் பணிக்கு அழைப்பு

சட்ட ஆலோசகர் பணிக்கு அழைப்பு

திருப்பூர்;திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் இளங்கலை சட்டப் படிப்பு அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்; குறைந்த பட்சம் 5 ஆண்டு சட்ட துறை அனுபவம் அல்லது மத்திய தீர்ப்பாயம், மாவட்ட கோர்ட், ஐகோர்ட்டில் அனுபவம் கட்டாயம்.ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணித்திறன் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.தகுதியுடையவர்கள் வேலை நாட்களில் காலை 10:00 முதல் பகல் 2:00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.வரும், ஆக., 5ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை