உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுலா விருது பெற அழைப்பு

சுற்றுலா விருது பெற அழைப்பு

திருப்பூர்;கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:செப்., 27, உலக சுற்றுலா தினம். அன்று சுற்றுலா தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, 17 பிரிவுகளின் கீழ், 48 விருதுகள், சுற்றுலா துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.உலக சுற்றுலா தினம், 2024ன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tntourismawards.comஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை, 86674 - 45253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை