உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தையல் இயந்திரம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழைப்பு

தையல் இயந்திரம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழைப்பு

திருப்பூர்;சீனாவின் 'ஜேக் டெக்னாலஜி' நிறுவனத்தின் புதிய 'ஓவர்லாக்' மெஷின் அறிமுக விழா நடந்தது.விழாவில் பங்கேற்க வருமாறு, இந்தியாவின் முன்னணி தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள், பின்னலாடை நிறுவனங்களின் இயந்திர தேவைகளை நிறைவேற்ற, திருப்பூரில் உற்பத்தி தொழிற்சாலை நிறுவ முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''இந்நிறுவனம், தானியங்கி தொழில்நுட்பத்தில், மாதம், இரண்டு லட்சம் தையல் இயந்திரங்களை வடிவமைக்கிறது.திருப்பூரில், 3.50 லட்சம் தையல் இயந்திரங்களுடன், 2000க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 'ஜேக்' நிறுவனத்தின் தொடர் சேவைகள் கிடைக்க வேண்டும். அதற்காக, 'ஜேக்' நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலை கிளையை, திருப்பூரில் திறக்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளோம்.அரசு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலிக்கப்படும் என்றும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி