உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோரிக்கையை தட்டிக்கழிக்கலாமா?

கோரிக்கையை தட்டிக்கழிக்கலாமா?

பணிக்கம்பட்டி கிராமத்தில், கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தாலும், அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''தற்போது மீண்டும் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும், கூட்டுறவுத்துறை, மனுவை நிராகரித்துள்ளது. கிராமத்தில் போதிய பரப்பளவு இல்லை. 80 சதவீதம் பேர் கடன் பெறும் உறுப்பினர்களாக இல்லை. கடன்களை பன்முகப்படுத்த வழிவகை இல்லை என்பது உள்ளிட்ட சப்பை காரணங்களை கூறி, சாத்தியம் இல்லை என, பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக சங்கம் அமைப்பதைத் தள்ளிப்போடாமல் உடனடியாக அமைக்க நடவடிக்கை தேவை'' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை