உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு

திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு

திருப்பூர்;திருப்பூர் கேரளா நண்பர்கள் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் திருப்பூர் ரீச் பவுண்டேஷன் சார்பில் நாளை திருப்பூரில் கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.திருப்பூர் கேரளா நண்பர்கள் கிரிக்கெட் அசோசியேஷன், திருப்பூர் ரீச் பவுண்டேஷன், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை, திருப்பூர் சைக்கிள் ரைடர்ஸ் கிளப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கேன்சர் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பேரணி, கிரிக்கெட் போட்டி மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகிறது.நாளை காலை 5:30 மணிக்கு தாராபுரம் ரோடு அரசு பொது மருத்துவமனை முன்பு துவங்கும் சைக்கிள் பேரணி 6:30 மணிக்கு அவிநாசி -- பெருமாநல்லுார் 6 வழிச்சாலை அருகில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி வளாகத்தில் நிறைவடைகிறது.எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் கேன்சர் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதன் பரிசளிப்பு விழாவின் போது, கேன்சர் விழிப்புணர்வு சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், ரோட்டரி சங்கத்தினர், கேரளா நண்பர் கிளப் குடும்பத்தார் மற்றும் மொதுமக்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ