உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீயில் எரிந்தது சரக்கு ஆட்டோ

தீயில் எரிந்தது சரக்கு ஆட்டோ

திருப்பூர்;குண்டடம், இடையான்கிணற்றை சேர்ந்தவர் குமார், 38. இவர் நேற்று முன்தினம் இரவு வாடகைக்கு சென்று விட்டு திரும்பினார். வீட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் ஆட்டோவில் இருந்து புகை வருவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் குமாருக்கு தகவல் கொடுத்தனர். வெளியே வந்து பார்த்த போது, தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில், தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஆட்டோ முழுவதும் எரிந்து போனது. குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி