உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்பளிப்புழுக்கள் உற்பத்தி வீரபாண்டி ஓடையில் தீவிரம்

கம்பளிப்புழுக்கள் உற்பத்தி வீரபாண்டி ஓடையில் தீவிரம்

திருப்பூர்:பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவிலிருந்து வீரபாண்டி வழியாக ஒரு ஓடை கடந்து செல்கிறது. வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் வீதி வழியாகச் சென்று, கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் வழியாக இந்த ஓடை பாய்கிறது. அவ்வழியாகச் சென்று முத்தையன் கோவில் பகுதியில் சங்கிலிப் பள்ள ஓடையில் இது சேருகிறது.இது இயற்கையாக அமைந்த நீர் வழி ஓடையாக இருந்தாலும், தற்போது பெரும்பாலும் கழிவு நீர் கால்வாய் போன்று தான் உள்ளது. இந்த ஓடை கடந்து செல்லும் பகுதிகளிலிருந்து கழிவு நீர் ஆங்காங்கே இதில் சேருகிறது. முறையாகத் துார்வாரப்படாமல் ஓடை முழுவதும் பெருமளவு விஷ செடிகள் உள்ளிட்ட செடியினங்கள் அதிகளவில் வளர்ந்து புதர் போல் மாறிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுவும், தற்போது கம்பளிப்புழுக்களும் இவற்றில் பெருமளவு உற்பத்தியாகிறது.இவை ஓடையின் அருகேயுள்ள வீடுகளில் புகுந்து பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. கம்பளிப்புழுக்கள் காரணமாக வீடுகளில் வசிப்போர் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் வீடுகளைக் காலி செய்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையை முழுமையாகத் துார் வாரி, மழை நீர் முறையாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ