உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கலுாருக்கு காவிரி குடிநீர் திட்டம் ஒன்றியக்குழு தலைவர் தகவல்: கவுன்சிலர்கள் வரவேற்பு

பொங்கலுாருக்கு காவிரி குடிநீர் திட்டம் ஒன்றியக்குழு தலைவர் தகவல்: கவுன்சிலர்கள் வரவேற்பு

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றிய குழு கூட்டம், தலைவர் குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், ஷெல்டன் முன்னிலை வகித்தனர்.கூட்ட விவாதம் வருமாறு:ஜோதிபாசு (இந்திய கம்யூ.,): தொங்குட்டிபாளையத்தில் குடிநீர் இல்லை. 1,500 அடிக்கு போர்வெல் போட வேண்டும். அத்திக்கடவு குடிநீரை அதிகரிக்க வேண்டும். கே. ஆண்டிபாளையம் ரேஷன் கடை கட்டியும் திறக்கவில்லை. ஆண்டிபாளையம் அங்கன்வாடி கட்டடம் இடித்து ஓராண்டு ஆகிவிட்டது.குமார் (தலைவர்): எல் அண்ட் டி தண்ணீர் விலை அதிகம். ஊராட்சிகளால் வாங்க முடியாது. அத்திக்கடவு குடிநீருக்கே பாக்கி உள்ளது.பாலகிருஷ்ணன்(தி.மு.க.,): அவிநாசி பாளையம், தொட்டியபாளையம், வட்டமலைப்பாளையத்தில் தண்ணீர் இல்லை. கதர்கடை மேடு முதல் நாச்சிபாளையம் ரோடு வரையும், கொடுவாய் தனியார் பால் பண்ணை முதல் செம்மாண்டம்பாளையம் வரை ரோடு பழுதாகி உள்ளது.லோகு பிரசாத் (தி.மு.க.,): நல்லா கவுண்டம்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி தேவை. மாதப்பூரில் குடிநீர் இல்லை.சுப்பிரமணி (தி.மு.க.,): வரக்குட்டை பாளையம்- குருநாதம் பாளையம் ரோடு மோசமாக உள்ளது.ராஜேஸ்வரி (காங்.,): செம்மடைப்பாளையம்- ராமே கவுண்டம்பாளையம் ரோட்டுக்கு தார் ரோடு போட வேண்டும். வெள்ளநத்தத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது.பழனிசாமி (மாவட்ட கவுன்சிலர்): அத்திக்கடவு குடிநீர் கிழக்கு பகுதிக்கு வருவதில்லை. மாதம் ஒருமுறை வருகிறது. நிரந்தர தீர்வு காண வேண்டும். போர்வெல்லில் இரும்பு பைப் துருப் பிடிக்கிறது. பி.வி.சி., பைப்புக்கு மாற வேண்டும்.குமார்: பில்லுார் தண்ணீர் அதிகம் வருகிறது. ஆக., மாதம், பி.ஏ.பி., தண்ணீர் வந்தால் குடிநீர் பிரச்னை தீரும். நாமக்கல் அருகில் இருந்து காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், வெள்ளகோவில், காங்கயம், பொங்கலுார் ஒன்றியங்களில் குடிநீர் பிரச்னை தீர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, தலைவர் கூறியதும் கவுன்சிலர்கள் வரவேற்றனர். அதன்பின், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை