உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இழப்பீடு தொகை வழங்கும் நடைமுறையில் மாற்றம்

இழப்பீடு தொகை வழங்கும் நடைமுறையில் மாற்றம்

உடுமலை;விபத்துகளால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, இழப்பீடு தொகை வழங்குவது குறித்து கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், எதிர்பாராதவிதமாக இறப்பது அல்லது தீவிரமாக பாதிக்கப்படுவோருக்கு, அரசின் சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. விபத்தினால் இறக்கும் மாணவர்களுக்கு, தலா ஒரு லட்ச ரூபாய், பலத்த காயம் அடைந்த மாணவர்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், சிறிய காயம் அடைவோருக்கு, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.இழப்பீடு தொகை மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வழக்கமாக அரசின் அரசானை பெற்ற பின் தான், சம்பந்தப்பட்ட மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையில்தான் பள்ளிகளும் தொடர்ந்து செயல்பட்டது.இதனால் காலதாமதம் ஏற்படுவதால், பெற்றோர் மிகவும் அதிருப்திக்குள்ளாகின்றனர். காலம் கடந்து தொகை பெறுவதில் பயனில்லாமல் போவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மாணவர்களுக்கு எளிதில் இழப்பீடு தொகை பெறுவதற்கு தற்போது வழிமுறை மாற்றப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) விபத்து இழப்பீட்டிற்கு பெறப்படும் கருத்துருக்களை அரசாணை விதிமுறைகள் படி, நன்றாக பரிசீலித்து இழப்பீடு தொகை பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென, தொடக்கக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை