| ADDED : மே 06, 2024 11:23 PM
திருப்பூர்;கோடை வெப்பத்தை தணிக்க, ஆண்டிபாளையம் குளத்தில் நீந்தி விளையாடுவதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.திருப்பூர், மங்கலம் ரோட்டிலுள்ள ஆண்டிபாளையம் குளத்தில், நொய்யலில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. குளத்துக்குள், இரண்டு தீவு போன்ற மண் திட்டு அமைத்து, மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டுள்ளன. குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குவதால், படகுசவாரி துவக்க, சுற்றுலாத்துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.ஆண்டிபாளையம் குளம், மங்கலம் ரோடு பகுதியில் ஆழம் குறைவாகவும், வடக்கு கரைப்பகுதியில் ஆழம் அதிகமாகவும் இருக்கிறது. குளத்துக்கடை பகுதி வழியாக, கிழக்கு ஏரியில் பயணித்து குளத்துக்குள் சென்றுவரலாம்.கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டியெடுப்பதால், வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபாளையம் குளத்தில், தண்ணீரும் வேகமாக குறைந்து வருவதால், 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.விடுமுறை நாளான நேற்று, இளைஞர்கள், ஆண்கள் நேற்று முன்தினம் குளத்தில் நீந்தி விளையாடினர். ஆழம் குறைவான பகுதிகளுக்கு சென்று குளித்தனர். நன்கு நீச்சல் தெரிந்தநபர்கள் மற்றும் பெரியவர்களுடன் மட்டும் குளத்துக்கு செல்ல வேண்டும். மாறாக, விளையாட்டாக, குளிக்கலாம் என்று சிறுவர்கள் குளத்துக்கு செல்வதை பெற்றோரும், அப்பகுதி சேர்ந்த மக்களும் அனுமதிக்க கூடாது என்பது, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.