உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்

தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்

திருப்பூர்:திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து குறும்படம், ஆவணப் படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர் நாதன் ரகுநாதன் ஆகியோர் விருது பெற்ற படங்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திப் பேசினர். சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகம், செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 'குரங்குப்பெடல்' திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் பேசுகையில், ''இந்தாண்டு தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்கள் இடம் பெறவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.தேசிய சிறுவர் திரைப்பட இயக்கம், என்.எப்.டி.சி.,யுடன் இணைக்கப்பட்டது பெரும் பலவீனம். தேசியப் பட விருதுகள் பட்டியலில் குழந்தைகள் திரைப்படம் இல்லாமல் வெகுஜன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களிலும், குழந்தை திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது'' என்றார்.இயக்குனர்கள் பிருந்தா சாரதி, முருகேஷ், செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.பல்வேறு குறும்பட, ஆவணப்பட இயக்குனர்கள், நடிகர்கள், எடிட்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின், 'திரைக்கதை நுால் வரிசை -7' நுால் வெளியிடப்பட்டது. இயக்குனர் அர்ஜுன் சரவணன் நன்றி கூறினார்.-----திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம், கனவு இலக்கிய அமைப்பு சார்பில் நடந்த விழாவில், விருதுகளுடன் குறும்படம், ஆவணப்பட கலைஞர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை