உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காமராஜர் பிறந்த நாளில் மாணவருக்கு போட்டிகள்  

காமராஜர் பிறந்த நாளில் மாணவருக்கு போட்டிகள்  

திருப்பூர்:ஜூலை, 15 ல், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள், தமிழக அரசால், கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நாளில், காமராஜரின் அரும்பணி குறித்து, பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். இதற்கான செலவினங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பயன்படுத்த வேண்டும், என, கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்க கல்வித்துறை தரப்பில் இருந்து, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ