உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினசரி மார்க்கெட் முன் கான்கிரீட் ரோடு அமைப்பு

தினசரி மார்க்கெட் முன் கான்கிரீட் ரோடு அமைப்பு

திருப்பூர்:திருப்பூர் காமராஜ் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே மாநகராட்சி தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளது. இதையொட்டி அமைந்துள்ள ரோட்டில், பொது நுாலகம், தாய் சேய் நல விடுதி ஆகியன அமைந்துள்ளன.மேலும், பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து முத்துப்புதுார் மாநகராட்சி பள்ளி, பிரிவு சுகாதார அலுவலகம், கே.எஸ்.சி., பள்ளி, பழனியம்மாள் பள்ளி போன்றவற்றுக்குச் செல்வோர் இந்த பாதையைத் தான் பயன்படுத்துவர்.இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட் புதியதாக கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த ரோடு பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டது. மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணி பெருமளவு நிறைவு பெற்ற நிலையில், இந்த பாதை வழியாக பாதசாரிகள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டது.தற்போது, வளாகம் கட்டுமானப் பணி முடிவடைந்து, கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டாக நிலவிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழியாக இனி போக்குவரத்து எளிதாகும்.---திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் முன், தினமரி மார்கெட் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், முன்பகுதியில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ