உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா சாக்லேட் பறிமுதல்

கஞ்சா சாக்லேட் பறிமுதல்

அவிநாசி;அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில் போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு வசிக்கும் பீஹாரை சேர்ந்த பாரவ்குமார், 21 என்ற பனியன் தொழிலாளியின் அறையில் போலீசார் சோதனையிட்டனர். கஞ்சா சாக்லேட் இருந்ததை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்து, 50 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார், 24. இவரது கடையில், 60 கஞ்சா சாக்லேட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. முகேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.அவிநாசி கைகாட்டிப்புதுார் - சந்தைமேடு பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் சுப்பையா 40. அவரது கடையில், புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர், சுப்பையாவின் கடைக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்