உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்;உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தாராபுரம் சீத்தக்காடு பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பைக்கில் ரேஷன் அரிசி கொண்டு சென்ற, மாருதி நகரைச் சேர்ந்த கனகராஜ், 49 பிடிபட்டார்.அதே போல், பூலாவாரி ரோட்டில் ஒரு இடத்தில் நடத்திய சோதனையில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அங்கிருந்த சதாசிவம், 45 கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும், 2,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு அவர்கள் விற்பனை செய்வது விசாரணையில் தெரிந்தது.விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை