உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

திருப்பூர்: மாநில பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் அசோசியேஷன் சார்பில், ஜூலை, 26 முதல், ஆக., 1 வரை ஏழு நாட்கள், மாநில ரேங்கிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.திருப்பூர், லட்சுமி நகர், 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமியில் நடந்த போட்டியில், சப் ஜூனியர், ஜூனியர் பிரிவில், 120க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஜூனியர் பில்லியர்ட்ஸ் பிரிவில் லட்சுமி நாராயணன், ராகுல் வில்லியம்ஸ், அபினவ், ரோஹித் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.ஜூனியர் ஸ்னுாக்கர் போட்டியில், ராகுல், ஜபேஷ் நவீன்குமார், லட்சுமி நாராயணன், அப்துல் சைப், சப்- ஜூனியர் - பில்லியர்ட்ஸ் போட்டியில் ஜபேஷ் நவீன்குமார், ராகுல், துருவ் உள்ளிட்டோரும், சப்- ஜூனியர் ஸ்னுாக்கர் போட்டியில் அபினவ், கரண் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியவர்களை பி.ஜி.எம்., ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராம், 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமி செயலாளர் செந்தில் லோகநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ