உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாசடைந்த குடிநீர்: தொற்று அபாயம்

மாசடைந்த குடிநீர்: தொற்று அபாயம்

பல்லடம்:பல்லடம் ஒன்றியத்தில் உள்ள, 20 கிராம ஊராட்சிகளை சார்ந்து, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, அத்திக்கடவு, பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசிக்கு இடையே நடுத்தர மற்றும் ஏழை மக்களால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த முடியாது. எனவே, பெரும்பாலான பொதுமக்கள் அரசு வினியோகிக்கும் குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீர், குளோரினேசன் செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும். ஆனால், சமீப நாட்களாக, பல்லடம் வட்டார பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், மாசடைந்து காணப்படுகிறது. மாசடைந்த குடிநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளிலும், குடிநீர் மாசடைந்தது வருவதாகவும், அடிக்கடி உப்புத் தண்ணீர் கலந்து வினியோகிக்கப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே, குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ----பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் பழுப்பு நிறத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ