உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளி மைதானங்கள் புதுப்பொலிவு

மாநகராட்சி பள்ளி மைதானங்கள் புதுப்பொலிவு

திருப்பூர் : மறு சுழற்சி முறையில் பொருட்களைப் பயன்படுத்தி அமைத்த விளையாட்டு உபகரணங்களில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியன உள்ளன.ஒரு சில பள்ளிகளில் சிறிய அளவிலான மைதானங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடும் வகையில் உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது.மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவ்வகையில், இது போல் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத பள்ளிகளில் தனியார் பங்களிப்பு வாயிலாக விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, மாநகராட்சி 40வது வார்டு முருகம்பாளையம் நடுநிலைப் பள்ளி மைதானத்தில் மறு சுழற்சி முறையில் பொருட்கள் கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டன.இதில், ஊஞ்சல், சறுக்கல், சீஸா, மலையேற்ற பயிற்சி அமைப்பு ஆகியன அமைக்கப்பட்டு நேற்று மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். கவுன்சிலர்கள் திவாகரன், சுபத்ரா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ