உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்

கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்

திருப்பூர்:கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், சிக்கண்ணா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைகக்கல்லுாரி மைதானத்தில் கடந்த, 3 நாட்களாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி, பல்லடம் அரசு கலைக்கல்லுாரிகள், பார்க் கல்லுாரி, நிப்ட் டீ கல்லுாரி, கதிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில், பல்லடம் அரசு கலைக்கல்லுாரி அணியும், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணியும் மோதின. முதலில் 'பேட்' செய்த, பல்லடம் அரசு கலைக்கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 77 ரன்கள் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணி, 13.5 ஓவரில், 2 விக்கெட் மட்டுமே இழந்து, 79 ரன்களை எடுத்து, அபார வெற்றி பெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் குழந்தைவேல், சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் மற்றும் பொருளியல் துறை தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டி, பரிசளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ