உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

உடுமலை;உடுமலை - பழநி ரோடு நகரப்பகுதி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோடு பகுதியில், நகராட்சிக்குட்பட்ட கொல்லம்பட்டறை முதல் கொழுமம் ரோடு பிரிவு வரை முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.ரோடுகள் முழுவதும் மேடுபள்ளமாக இருப்பதால், இரவு நேரங்களில் அதிகமான வேகத்துடன் வரும் வாகனங்கள், சீராக செல்ல முடியாமல் மற்ற வாகனங்களை சேதப்படுத்தும் வகையில் செல்கின்றன.குறிப்பாக சுற்றுலா வாகனங்கள் இவ்வாறு தடுமாறுகின்றன. பஸ் ஸ்டாண்டிலிருந்து காந்திநகர் செல்லும் வழியில், ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது.பெரிதாக இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் அதன் அருகில் வரும்போது மட்டுமே, கவனிக்க முடிகிறது.ஆனால் குழி ஆழமாக இருப்பதால், வாகனங்கள் கடந்து செல்லும் போது தடுமாறுகின்றன. ரோட்டில் குழிகள் அதிகம் இருப்பதால், வாகன விபத்துகளும் அதிகரிக்கிறது.இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இருப்பதில்லை. பழுதான சென்டர் மீடியன் விளக்குகளையும் மாற்றாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் வர வேண்டியுள்ளது.ரோட்டை முழுமையாக பராமரித்து, சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்