உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் கரையோரம் காத்திருக்கும் ஆபத்து

நொய்யல் கரையோரம் காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர் : நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடக்கும் இடத்தில், ஆபத்தான இடத்தில் வாகனங்கள் கடந்து செல்கிறது.நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், திருப்பூர் யூனியன் மில் ரோட்டையும், ஈஸ்வரன் கோவில் வீதியையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் மீது உயர்மட்டப் பாலம் கட்டப்படுகிறது. ராட்சத துாண்கள் அமைக்கும் பணி, நொய்யல் ஆற்றுக்குள் நடந்து வருகிறது. இதனால், யூனியன் மில் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து ரவுண்டானா அருகே, ஆற்றினுள் குழி ஏற்படுத்தி பணி நடக்கிறது. இந்த இடம் போக்குவரத்து ரவுண்டானாவை ஒட்டி அமைந்துள்ளது.நொய்யல் கரை மீது ரோட்டில் தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடம் தற்போது ஆழமான குழியாக மாறி, பலவீனமாகி வருகிறது. கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, சரிந்து விழவும் வாய்ப்புள்ளது. கட்டுமானப் பணி நடக்கும், ஆபத்தான நிலையில் உள்ள இடம் அருகே வாகனங்கள் செல்லாமல், போக்குவரத்து ரவுண்டானா அருகே வாகனங்களை திருப்பி விடும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ