மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
29-Dec-2025
விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்
29-Dec-2025
காவல்துறைக்கு கனக்கிறது பணி
29-Dec-2025
உடுமலை;உடுமலை அருகே, அனைத்து பணிகளுக்கும், தொடர்ந்து அலைக்கழிக்கும் வங்கி கிளையை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. குடிமங்கலம் பகுதி விவசாயிகள், பல்வேறு விவசாய பணிகளுக்கு, வங்கிகளை அணுகி கடன் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், அனிக்கடவு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை குறித்து புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து,குடிமங்கலம் வட்டார விவசாயிகள், திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு கிராமத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 15க்கும் அதிகமான கிராம விவசாயிகள் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக செல்லும் விவசாயிகள், தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, கடனுக்காக அடமானம் வைக்கும் ஆவணங்களை, கடனை திருப்பிச்செலுத்திய பிறகு, மீண்டும் வழங்க இழுத்தடிக்கின்றனர்.கடனை குறித்த நேரத்துக்குள் செலுத்தினாலும், ஆவணங்களை பெற அலைக்கழிக்கப்படுகிறோம். இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், காப்பீட்டிற்கான ஆவணங்களை வழங்கவும் இழுத்தடிக்கின்றனர்.பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதைக்கண்டித்து, விவசாயிகள் ஒருங்கிணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Dec-2025
29-Dec-2025
29-Dec-2025