உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு செய்யலாம்

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு செய்யலாம்

திருப்பூர்: ஆடி, 18ம் தேதி ஆடிப்பெருக்கு தினம். அன்றைய தினம், நிலம், தங்கம், வாகனங்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவர். அன்றைய தினத்தில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.இந்தாண்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள், மக்களின் வசதிக்காக நாளை (ஆக., 3ம் தேதி) அரசு விடுமுறை வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்க வேண்டும் என்று அந்தந்த துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்-பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்