உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பணிகள் தாமதம்; மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சாலை பணிகள் தாமதம்; மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 30-மாநகராட்சி 14 வது வார்டில் சாலை பணிகள் தாமதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு, 7 மற்றும் 9 வது வீதி, விவேகானந்தர் வீதிகளை இணைக்கும் சாலை பணி நீண்ட நாளாக முடிக்கப்படாமல் ஜல்லி பரப்பி கிடக்கிறது. இப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நேற்று மாலை, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர குழு உறுப்பினர் கவிதா தலைமை வகித்தார். சுகுமார், பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நிர்வாகி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர். பங்கேற்றவர்கள், சாலை பணியை முடிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஒரு வாரத்தில் பணி முடிக்காவிட்டால், மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை