உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வீரபாண்டி ஸ்டேஷன் திறப்பு தாமதம்

புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வீரபாண்டி ஸ்டேஷன் திறப்பு தாமதம்

திருப்பூர்: திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் பணிகள் நிறைவடைந்தும், திறக்கப்படாமல் உள்ளன.திருப்பூர், குமார் நகர், அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பில் பழைய ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.கடந்த 2021 டிச., மாதம் 2.24 ஏக்கரில் கட்டுமான பணி துவங்கியது. ஐந்து தளத்துடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் உள்ளிட்ட சில பணிகளே நிலுவையில் உள்ளன.வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அதே பகுதியில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் ஸ்டேஷனை உள்ளிடக்கிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்கள் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன. இவை விரைந்து திறப்பு விழா காண போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு சிரமம்

தற்போது சிறுபூலுவபட்டியில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் வசதி குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இருந்து வருகிறது. புதிய கட்டடம் திறக்கப்பட்டால், பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ