உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

பல்லடம்:கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:கோவை - திருப்பூர் மாவட்டத்தில், தண்ணீர் இன்றி தென்னை மரங்கள் கருகி வருவதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையும் பொய்த்து, நிலத்தடி நீரும், 1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லாததால், பாசனத்துக்கும் திறந்து விட முடியாத நிலை உள்ளது.எனவே, கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் போது, விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருப்பதை தவிர்க்க இழப்பீடுகள் வழங்கப்பட்டன. அதுபோல், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தனித்தனியே கணக்கெடுத்து, இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை