உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாகாளியம்மன் கோவில் கடைகள் இடித்து அகற்றம்

மாகாளியம்மன் கோவில் கடைகள் இடித்து அகற்றம்

பல்லடம் : பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பல ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, கோவில் முன் உள்ள கடைகளை அகற்றினால் மட்டுமே திருப்பணிகளை மேற்கொள்ள முடியும் என, திருப்பணிக் குழுவினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கடைகளை இடித்து அகற்றுவதால், வாழ்வாதாரம் பாதிக்கும் என கடை உரிமையாளர்கள் முறையிட்டனர்.இதனால், கடைகளை அகற்றவும், திருப்பணி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. விதிமுறைப்படி கடைகளை அகற்றிவிட்டு திருப்பணிகளை துவங்க கோர்ட் உத்தரவிட்டது. கடைகளை அகற்றிக் கொள்ள அறநிலையத்துறை கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதன்படி, கடைகள் காலி செய்யப்பட்ட நிலையில், கடைகள் இடித்து அகற்றப்படும் என, கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, பொக்லைன் கொண்டு, கடைகளை இடித்து அகற்றும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ