உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை: உடுமலை தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் பாலசந்திரமூர்த்தி, வட்டக்கிளை தலைவர் தாசன், மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நிர்வாகி செல்லத்துரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஓய்வூதியருக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்ட குளறுபடிகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம், 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழகத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி