உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொத்து அவரையில் நோய் மேலாண்மை

கொத்து அவரையில் நோய் மேலாண்மை

உடுமலை;உடுமலை மற்றும் குடிமங்கலம் சுற்று வட்டாரத்தில், மானாவாரியாகவும், கிணற்றுப்பாசனத்துக்கும், பரவலாக அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.அவரையில், கொடி மற்றும் கொத்து அவரை என இரண்டு ரகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில், நான்கு மாத பயிரான கொத்து அவரை, மேட்டு பாத்தி அமைத்து பயிரிடப்பட்டு வருகிறது.கோவை வேளாண் பல்கலை., யின், கோ.6, கோ.7, கோ.8, கோ.9, கோ.10., ரகங்களை நடவுக்கு பயன்படுத்துகின்றனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:ெஹக்டேருக்கு, 25 கிலோ விதைகள் போதுமானதாகும். விதைகளை நுண்ணுயிர் உரங்களில் நனைத்து விதை நேர்த்தி செய்தவதன் வாயிலாக, பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் கட்டுப்படுகிறது.பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, விளக்குபொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு ஐந்து எண்ணிக்கை வீதம் பயன்படுத்தலாம்.அசுவினி, சாம்பல் நோய் மற்றும் சாறு உறிஞ்சும் நோய் போன்றவை அவரையை தாக்குகிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையும், முறையான பயிர் சாகுபடி முறைகளையும் கடைபிடிக்கும் போது ெஹக்டேருக்கு, எட்டு முதல் பத்து டன் வரைக்கும் மகசூல் பெற வாய்ப்புள்ளது.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'கொத்து அவரை சாகுபடியில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நிலையான விலை கிடைப்பதில்லை. நடவு செய்த, 50 நாட்களில் இருந்து காய்கள் அறுவடையாகிறது. வாரம் ஒருமுறை காய்கள் பறிக்கப்படுகிறது. ஏக்கருக்கு, 500 முதல், 600 கிலோ வரைக்கும் கிடைக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ