உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட தடகள ம் வாகை சூடியவர்கள்

மாவட்ட தடகள ம் வாகை சூடியவர்கள்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், ஆறாவது மாவட்ட ஜூனியர் தடகள போட்டி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்தது. 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. டீ பப்ளிக் பள்ளி சேர்மன் 'ஈஸ்ட்மேன்' சந்திரன் துவக்கி வைத்தார். சங்கச் செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். எம்.பி., சுப்பராயன் தேசியக்கொடி ஏற்றினார். மேயர் தினேஷ்குமார் ஒலிம்பிக் கொடியையும், ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். மாவட்டம் முழுதும் இருந்து, 1,560 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.முதலிடம் பெற்றவர்கள்மாணவர் பிரிவுஇருபது வயது பிரிவு, 5000 மீ., ஓட்டத்தில், கிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் மனோஜ்குமார், மும்முனை தாண்டுதலில் பிரியன்சுகராஜ், ஈட்டி எறிதலில் ராகுல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் இரண்டிலும் சிவரத்தினம், உயரம் தாண்டுதலில் வித்தியபிரியன், 400 மீ., ஓட்டத்தில் கோகுல் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.பதினெட்டு வயது பிரிவு, 1000 மீ., ஓட்டம், பிரபாகரன், 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், கேவின்சஞ்சீவ். 16 வயது பிரிவு, 80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் ஜாய்ரித்திஷ், 600 மீ., ஓட்டத்தில் யாதின்.மாணவியர் பிரிவுஇருபது வயது பிரிவு, குண்டு எறிதலில் தீபா, உயரம் தாண்டுதலில் அபிநயஸ்ரீ, 800 மீ., ஓட்டத்தில் நந்தினி, 3000 மீ., ஓட்டத்தில், சுதர்ஷினி, நீளம் தாண்டுதல் மற்றும் மும்முனை தாண்டுதல் இரண்டிலும் பவீனா, வட்டு எறிதலில் ஐஸ்வர்யா, 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மகுடேஸ்வரி முதலிடம். பதினெட்டு வயது, 1000 மீ., ஓட்டத்தில் பிரியதர்ஷினி, 80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பிரேமா, 600 மீ., ஓட்டத்தில் வர்ஷிதா ஆகியோர் முதலிடம்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை