உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

அவிநாசி :அவிநாசி அருகே பெரிய நாதம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் விக்டரி கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது.இப்போட்டி, 10 வயது, 12 வயது என பிரிவுகளாக நடைபெற்றது. 10 வயது பிரிவில், போர்டிலெவன் அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாம் இடத்தை ஈரோடு யுனைடெட் ஸ்போர்ட்ஸ் அகாடமி பெற்றனர்.மூன்றாம் இடத்தை, கோவில் பாளையம் இளைய தலைமுறை ஸ்போர்ட்ஸ் அகாடமியும், நான்காம் இடத்தை அன்னுார் டிசா அகாடமியும் பெற்றனர்.தொடர்ந்து, 12 வயது பிரிவில் லிட்டில் கிங்டம் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றனர். நாச்சம்மாள் வித்யவாணி பள்ளி இரண்டாம் இடத்தையும், அன்னுார் டிசா அணி மூன்றாம் இடத்தையும், ஆண்டிபாளையம் ஸ்போர்ட்ஸ் புட்பால் அகாடமி நான்காம் இடத்தையும் பெற்றனர்.இன்று, 14 வயது பிரிவில் பெண்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை