உடுமலை; மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி முதல் நாள் லீக் சுற்று போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில் நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், 5 - 0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் சென்சுரி பள்ளி அணி, உடுமலை லார்து மாதா பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 9 - 0 என்ற கோல் கணக்கில், மானுார்பாளையம் ஆர்.ஜி.எம்., பள்ளி அணியை வென்றது.தொடர்ந்து நடந்த முதல் லீக் ஆட்டத்தில், திருப்பூர் சென்சுரி பள்ளி அணி, 4 - 0 என்ற அடிப்படையில் ஆர்.வி.ஜி., பள்ளியை வென்றது.அடுத்த லீக் ஆட்டத்தில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, திருப்பூர் ஜெய் சாரதா அணியை, 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.மூன்றாவது லீக் சுற்றில், சென்சுரி பள்ளி அணியும், ஜெய்சாரதா பள்ளி அணியும் சமன் செய்தனர்.நான்காவது லீக் போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், ஆர்.வி.ஜி., பள்ளி அணியை வென்றது.