உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட வாலிபால் போட்டி அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

மாவட்ட வாலிபால் போட்டி அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருப்பூர்;திருப்பூரில் மாவட்ட வாலிபால் போட்டி நேற்று துவங்கியது. வீரர், வீராங்கனையர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.திருப்பூர், ஜெய் நகர், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வாலிபால் போட்டி நேற்று துவங்கியது. துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நஞ்சப்பா பள்ளி ஓய்வுபெற்ற உடற்கல்வித்துறை ஆசிரியர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் நகுலன் பிரணவ் செய்திருந்தார்.ஜூனியர் பிரிவில், 13, பொது பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகளை தொடர்ந்து, முதல் அரையிறுதிப் போட்டியில் ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணி, 2:0 என்ற செட் கணக்கில், அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணியை வென்றது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2:1 என்ற செட் கணக்கில், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா பள்ளி அணியை வென்றது.பொது பிரிவு, முதல் அரையிறுதிப் போட்டியில் வித்ய விகாசினி பள்ளி அணி, 2:0 என்ற செட் கணக்கில், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா பள்ளி அணியை வென்றது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஆத்துப்பாலையம், ஏ.வி.பி., பள்ளி அணி, 2:0 என்ற செட் கணக்கில், பிரன்ட்லைன் அகாடமி பள்ளி அணியை வென்றது. இன்று இறுதி போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை