உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாப் மங்கையரே... மறந்து விடாதீங்க! இன்று அனிகா ஆடி தள்ளுபடி விற்பனை

டாப் மங்கையரே... மறந்து விடாதீங்க! இன்று அனிகா ஆடி தள்ளுபடி விற்பனை

திருப்பூர்;நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருவிக்கப்பட்ட கைத்தறி சேலைகளின், 'அனிகா' பிரத்யேக ஆடி விற்பனை, திருப்பூரில் இன்று (15ம் தேதி) நடக்கிறது. பத்து முதல் அறுபது சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.திருப்பூர், அவிநாசி ரோடு, ஆர்.கே., ரெசிடென்சியில், 'அனிகா' பிரத்யேக சேலைகளின் ஆடி விற்பனை, அதிரடியான தள்ளுபடி சலுகையுடன் இன்று நடக்கிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருவிக்கப்பட்ட, பெண்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலான கைத்தறி சேலைகள் விற்பனை களைகட்டப்போகிறது. பனாரஸ் பட்டு, ஆர்கன்ஸா பட்டு, டஸ்ஸர், டிஸ்யூஸ், ஷிபான், சந்தேரி மற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் விற்பனை முகாமில் இடம்பெறும்.இந்தியாவின் பிரபல கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, கலம்காரி, பாந்தினி, ஷிபோரி போன்ற சிறப் பான நெசவு முறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட சேலைகள், நம்ப முடியாத விலையில் விற்பனைக்கு வருகிறது.இத்தகைய அரிய வகை சேலைகள் அனைத்தும் 10 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையுடன் விற்பனைக்கு வருகிறது. காலை, 9:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை விற்பனை மேளா நடைபெறுகிறது.ஐந்தாயிரத்துக்கும் குறைவான விலையில், 'அனிகா' பிரத்யேக ஆடி விற்பனையில், அதிஅற்புத வடிவமைப்புடன் கூடிய சேலைகளை வாங்கிச்செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை