உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தோப்புக்கரணமும் யோகா தான்

தோப்புக்கரணமும் யோகா தான்

திருப்பூர்;திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரியில், உலக யோகா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலாதேவி, பாக்கியலட்சுமி, தேவிப்பிரியா, கோமளவள்ளி, கோமதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.'தினசரி வாழ்வில் யோகா மருத்துவம்' என்ற தலைப்பில் யோகா பயிற்சியாளர் பவித்ரா தேவி பேசியதாவது:நம் முன்னோர்கள் மேற்கொண்ட அன்றாட வீட்டு வேலைகளில், யோகா கலந்திருந்தது. சாந்துப்பொட்டு, மைப்பொட்டை குழந்தைகள் நெற்றியில் அழுத்தி வைப்பது; நவதுவாரங்கள் வழியாக கழிவுகள் வெளியேற மூக்கின் நுனிப் பகுதியை மேலே இழுப்பது; அம்மியில் மிளகு அரைப்பது; கைகளைத் தட்டுவது; காதுகளை இழுத்து பிடித்து, சுவாமிக்கு நாம் போடும் தோப்புக்கரணம் அனைத்திலும் யோகா உள்ளது. சரியான முறையில் யோகா கற்றுக்கொண்டு, தினசரி நேரம் ஒதுக்கி, தவறாமல் யோகா செய்தால், பெண்கள் ஆரோக்கியமுடன் வாழலாம்.இவ்வாறு, பவித்ரா தேவி கூறினார்.முன்னதாக, அமர்ந்த, நின்ற நிலையில் எளிய யோகாசனங்கள் குறித்து மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

நீதிபதிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.3வது மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் மினோ தலைமை வகித்தார். நீதிபதிகள் சக்திவேல், உமா மகேஸ்வரி, மதிவதனி வணங்காமுடி முன்னிலை வகித்தனர்.விஷ்வா ஆயுஷ் கேந்திரா யோகா பயிற்சியாளர் பழனிசாமி, குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகா குறித்த பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. தாராபுரம் வக்கீல் சங்க தலைவர் கலைச்செழியன், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கோர்ட் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை