உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு

வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்;திருப்பூர் நொய்யல் ஆற்றின் மீது, ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி அருகே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பிரிவு பகுதியிலிருந்து நொய்யல் ஆறு வழியாக, ராயபுரம் பகுதியை இணைக்கும் விதமாக இப்பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது.இந்த பாலம் வழியாக வரும் வாகனங்கள் ராயபுரம், விநாயகபுரம் வழியாக வடக்கு பகுதிக்குச் சென்று சேருகிறது. இந்நிலையில், பாலம் அமைந்துள்ள இடத்தில், ராயபுரத்தை இணைக்கும் விநாயகபுரம் வீதியில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதற்காக இந்த ரோட்டை குறுக்கு வாக்கில் பெரிய அளவிலான குழி தோண்டப்பட்டுள்ளது.இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் அமையும் இடத்தில் குடிநீர் குழாய்கள் கேபிள்கள் ஆகியன நிலத்தில் பதிக்கப்பட்டுள்ளன. வடிகால் கட்டும் பணியின் போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னரே, வடிகால் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.இப்பணி நடப்பதால், வாகனங்கள் நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கட்டுமான பணி நடப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் அதன் பின் மீண்டும் திரும்பி மாற்று வழியில் தங்கள் பயணத்தை தொடருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை