உடுமலை,;உடுமலையில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்து, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 510 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் தொகுப்பு வீடுகள் பழுது பார்த்தல் ஆகிய திட்டங்களின் கீழ், 9.78 கோடி ரூபாய் மதிப்பில் பணி ஆணைகளை வழங்கினார்.மேலும், 70 விவசாயிகளுக்கு, நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் உத்தரவுகளையும், தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற, ஆய்வுக்கூட்டம் நடந்தது.முன்னதாக, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,''காலை உணவு திட்டம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 1,081 அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டு, 75,482 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, 31 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,742 மாணவர்கள் பயன்பெறும் வகையில், திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மேலும், உடுமலையில், காமராஜர் சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.