உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 24 மணி நேரமும் குடிநீர் வீண்

24 மணி நேரமும் குடிநீர் வீண்

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டில், சங்கிலி பள்ளம் ஓடை, உஷா தியேட்டர் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறி, சாலையோரமே குழியாகி விட்டது. மெயின் பைப் லைன் என்பதால், இரவிலும் தொடர்ந்து தண்ணீர் வீணாகிக் கொண்டே இருக்கிறது. இங்குள்ள வங்கி, காம்பளக்ஸ் கடைக்கும் வருவோர் தண்ணீரை தாண்டி குதித்தும், மிதித்தும் வந்து செல்கின்றனர்.வளைவு பகுதியாக உள்ள கொடுவாய் - திருப்பூர் ரோட்டில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டே இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூரில் பல இடங்களில் வாரம், பத்து முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகமே தடுமாற்றத்தில் உள்ள நிலையில், நாள் முழுதும் இவ்வாறு தண்ணீர் வீணாவது அவ்வழியாக செல்வோரை வேதனையடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்