உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை விரிவாக்க இடத்தில் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

சாலை விரிவாக்க இடத்தில் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

அனுப்பர்பாளையம்:திருப்பூர், பி.என்., ரோடு, பூலுவப்பட்டி நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் ரிங் ரோட்டில் அதிகளவில் வீடுகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன.இதன் காரணமாக, எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். சாலை குறுகியளவில் இருந்ததால், கடும் போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது.இதனால், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் இருபக்கமும் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.ஆனால், மின் கம்பம் அகற்றப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மின் கம்பத்தில் மோதி விபத்தை சந்திப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் இரு பக்கமும் வரிசையாக மின் கம்பம் உள்ளது. அவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.ரோட்டோரத்தில் மின் கம்பம் இருக்கும் இடங்களில் அப்பகுதியினர் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி கொள்கின்றனர். இதனால் விரிவாக்கம் செய்தும் பயனில்லாத நிலையில் உள்ளது. மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல், நெருப்பெரிச்சல் மாநகராட்சி வரி வசூல் மையம் முன்பு ரோட்டை ஆக்கிரமித்து குடிநீர் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், எச்சரிக்கை 'ரிப்ளெக்டர்' கூட ஒட்டப்படவில்லை. இதிலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை