உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் ஆய்வுத்துறை விழிப்புணர்வு அவசியம்

மின் ஆய்வுத்துறை விழிப்புணர்வு அவசியம்

திருப்பூர், : நாளுக்கு நாள் மின் விபத்து அதிகரித்து வருவதால், மின் ஆய்வுத்துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தை கொண்டாட, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மின்சாதன பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மொபைல் போன் சார்ஜர் போட்டிருந்த போது, மின்கசிவு ஏற்பட்டதால் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளன.குழந்தைகள் அறியாமல் மின் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேசிய மின்பாதுகாப்பு வாரத்தின் ஒரு நிகழ்வாக, மின்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, கலெக்டர் கிறிஸ்துராஜ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மின்நுகர்வோரின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை