| ADDED : ஜூலை 19, 2024 11:19 PM
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது வஸ்திரா சில்க்ஸ். கடை திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளே ஆன போதும், வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்து வருகிறது.'கைத்தறி பட்டு மட்டுமே இங்கு பிரதானம்' என்பது இக்கடையின் அடையாளம். காஞ்சிபுரம் பட்டு, வாரணாசி பனாரஸ் என ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிரசித்தி பெற்ற புடவைகளின் அணிவகுப்பை இங்கு பார்க்க முடியும்; வாங்கி மகிழ முடியும். பட்டு மட்டுமின்றி, காட்டன், பேன்ஸி, கைத்தறி, விசைத்தறி சேலைகளும், மங்கையரின் மனம் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 'திருப்பூர் மட்டுமின்றி, கோவை, திருச்செங்கோடு என பிற இடங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களே எங்களது கடையை பிறருக்கு அறிமுகப்படுத்துகின்றனர். பல ஆண்டு காலம், பல தலைமுறை தாண்டி புடவை விற்பனை செய்து வரும் கடைகளின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் கூட, வஸ்திரா சில்க்ஸின் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டனர்.'நிறைவான தரம்; நியாயமான விலை' என்பது எங்களின் வளர்ச்சிக்கு காரணம். 5 முதல், 50 சதவீதம் வரை ஆடி தள்ளுபடி வழங்குகிறோம். விலையை உயர்த்தி, அதில் தள்ளுபடி தரும் விற்பனை யுக்தியை நாங்கள் பின்பற்றுவதில்லை; அசல் விற்பனை விலையிலேயே தள்ளுபடி தருகிறோம்' என்கிறார் கடை உரிமையாளர் கல்பனா தங்கராஜ். தொடர்புக்கு; 9585897999.