| ADDED : ஜூன் 30, 2024 11:15 PM
''மனிதனின் சராசரி ஆயுட்காலம், 70 வயது என வைத்துக் கொண்டால், தன் வாழ்நாளில் தினமும், வெறும் 7 நிமிடம் செலவழித்தால் போதும்; தன் பற்களை ஆயுட்காலம் முழுமைக்கும் பாதுகாத்துக் கொள்ள முடியும்'' என்கிறார், திருப்பூர், சுந்தரம் பல் மருத்துவமனை நிறுவனரும், தலைமை மருத்துவருமான டாக்டர் ராஜேஷ்.அவர் மேலும் கூறியதாவது:பல் பாதுகாப்பு முறைகளில் காலை மற்றும் இரவு, மூன்று நிமிடம் செங்குத்தாக பல் துலக்க வேண்டும். எவ்வகை உணவு உட்கொண்டாலும், உடனடியாக வாய் கொப்பளிக்க வேண்டும். காலை, மாலையில் பல் மற்றும் ஈறுகளை, வெறும், 30 வினாடிக்கு மசாஜ் செய்ய வேண்டும். இரு மாதத்துக்கு ஒரு மை 'டூத் பிரஷ்' மாற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை, பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது, பல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.சுந்தரம் பல் மருத்துவமனை, 20வது ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. எங்களின் சிறப்பு சிகிச்சையில் ஒன்றான பல் பதியம் (இம்பிளான்ட்) என்ற பல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை வாயிலாக, பற்கள் இல்லாதவர்களுக்கும் பற்களை பொருத்த முடியும். நவீன தொழில்நுட்பத்திலான 'கிளிப்' வாயிலாக, பல் வரிசையை, சிறந்த முறையில் சீரமைத்து தருகிறோம்.புதுப்பொலிவுடன் நித்தின் குழந்தைகள் பிரிவு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு, இங்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எங்கள் மருத்துவமனையில் முன்பதிவு பெற, 73393-39108 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.