உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் தின விழா பி.எம்.எஸ்., தீர்மானம்

சுற்றுச்சூழல் தின விழா பி.எம்.எஸ்., தீர்மானம்

திருப்பூர்;திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் நேற்று பாரதிய மஸ்துார் சங்க (பி.எம்.எஸ்.,) புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், அகில பாரத கணக்கு தணிக்கை பிரிவு பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாநில துணை தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்கச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்த்தல், வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சுற்றுசூழல் தினத்தை 50 இடங்களில் நடத்துதல் என்று முடிவெடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை