திருப்பூர்:திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.பிளஸ் 2 தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்களில் அறிவியல் பிரிவு மாணவர்கள் பலர் இடம்பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவ்வகையில், செல்வா என்ற மாணவர், தமிழ் - -98, ஆங்கிலம் - -99, இயற்பியல் - -97, வேதியியல் - -98, கணினி அறிவியல் -- 100, கணிதம் - -100, என மொத்தம் 592 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.மாணவி சிந்துஜா, தமிழ் - -99, ஆங்கிலம் - -88, பொருளாதாரம் -- 100, வணிகவியல் - -100, கணக்குப்பதிவியல் - -100, கணினி பயன்பாடு - -99 என மொத்தம், 586 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் பிரசாந்த், தமிழ் - -95, ஆங்கிலம் - -93, இயற்பியல் - -98, வேதியியல் - -99, கணிதம் - -100, கணினி அறிவியல்- - 100 என மொத்தம், 585 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண்களில் 200க்கு 199 முதல் 170 வரை 47 மாணவர்கள் பெற்றுள்ளனர். 61 மாணவர்கள், சில பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.சாதித்த மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி பாராட்டி கேடயம் வழங்கினார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் சுருதி ஹரீஷ் மற்றும் பள்ளி முதல்வர் மணிமலர் ஆகியோரும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.