உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி; 2 பேர் கைது

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி; 2 பேர் கைது

திருப்பூர்;திருப்பூர் - தாராபுரம் ரோடு, சந்திராபுரம் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர், தனபால், 41. கடந்த 3ம் தேதி இரவு, மது விற்பனை செய்த பணத்துடன் சென்ற வீட்டுக்கு சென்ற தனபாலை மடக்கிய மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 2.50 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். வழக்குப்பதிவு செய்த நல்லுார் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அந்தோணி மைக்கேல்ராஜ், 18; முருகன், 41 ஆகிய இருவரை கைது செய்தனர்; இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை