உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு? வருவாய் துறையினர் அளவீடு

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு? வருவாய் துறையினர் அளவீடு

பல்லடம் : பல்லடம் அருகே உகாயனுார் ஊராட்சியில் அரசு புறம்போக்கு ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியை சேர்ந்த சிலர், திருப்பூர் தெற்கு தாசில்தாரிடம் புகார் மனு அளித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் கவுரிசங்கர், அவிநாசிபாளையம் ஆர்.ஐ.,க்கு உத்தரவிட்டார். வருவாய் துறையினர் இன்று அளவீடு பணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், குறித்த நேரத்தில் அளவீடு பணி துவங்காததால், புகார்தாரர்கள் உகாயனுார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஏற்கனவே, அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய பணி பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தாசில்தார் உத்தரவிட்டும், மீண்டும், அளவீடு செய்யாமல் இழுத்தடிப்பதாக புகார்தாரர்கள் குற்றம் சாட்டினர்.ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால், அளவீடு செய்த பின் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என, எதிர் தரப்பினர் வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவிநாசிபாளையம் போலீசார் முன்னிலையில் அளவீடு செய்யும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ