உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செடி முருங்கை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

செடி முருங்கை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

உடுமலை;தாராபுரம், மூலனுார் உட்பட வறட்சியான பகுதிகளில், செடி முருங்கை சாகுபடி பரப்பு அதிகமுள்ளது. வறட்சியை தாங்கி வளர்ந்து, பலன் தரும், முருங்கை ரகங்களை தேர்வு செய்து அப்பகுதி விவசாயிகள், இச்சாகுபடியில், நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், நிலையான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, செடி முருங்கை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'அனைத்து வகை மண்ணிலும் செடி முருங்கை வளரும். அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை; பயிரிட்ட ஆறு மாதத்தில் காய்க்க தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்கிறோம்.சராசரியாக ஒரு ெஹக்டேருக்கு, 50 டன் வரை விளைச்சல் கிடைக்கும். சொட்டுநீர் பாசனம் வாயிலாக, உரம் மற்றும் நீர் செலுத்துகிறோம். பருவநிலை மாற்றங்களால், பூ மொட்டு துளைப்பான் மற்றும் பழ ஈ தாக்குதல் ஏற்படுகிறது. உள்ளூர் சந்தைகளிலேயே காய்களை சந்தைப்படுத்தி வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை