உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய அமைப்பினர் போராட்டம்

விவசாய அமைப்பினர் போராட்டம்

திருப்பூர்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் குமார், சின்னசாமி தலைமை வகித்தனர். இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கோபால் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மத்திய பட்ஜெட் நகல் எரிக்க முயன்றவர்களை, போலீசார் தடுத்தனர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணை செயலாளர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி