உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தந்தையர் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்

தந்தையர் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்

உடுமலை;கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகன்டரி பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தந்ததையர் தின விழா கொண்டாடப்பட்டது. அவ்வகையில், உடுமலை அருகே கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகன்டரி பள்ளியில் தந்தையர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது.ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தது. மாணவர்கள் அவர்களின் தனித்திறன்களையும் போட்டிகளில் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சரளாதேவி பாராட்டு தெரிவித்தார்.இதில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை